திங்கள், 7 பிப்ரவரி, 2011

அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாடு

அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாடு பிப்press ரவரி 6 கோவை சித்ரா அரங்கத்தில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 580 பிரதிநிதிகளுடன் மாநாடு துவங்கியது. மாநாட்டு தலைமைக்குழுவாக ஹீலர்.போஸ் முகமதுமீரா, ஹீலர்.தேவராஜன், ஹீலர்.பாண்டியன், ஹீலர்.செளதா, ஹீலர்.புனிதவதி இருந்தனர். கோவை மண்டலச் செயலாளர் ஹீலர். உமாதேவி வரவேற்புரை நிகழ்த்த, துவக்கவுரையை மாநில துணைத்தலைவர். ஹீலர். மகி.ராமலிங்கம் நிகழ்த்தினார். அறிக்கையை பொதுச்செயலாளர்.உமர்பாரூக் வெளியிட்டு பிரதிநிதிகள் கலந்துரையாடலுக்குப்பின் தொகுப்புரை வழங்கினார். மாநிலப் பொருளாளர். ஹீலர்.ஜெயராஜன், மாநில துணைச்செயலாளர். பார்த்திபன் ஆகியோர் மண்டல பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.

31 நபர்களைக்கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளாக ஹீலர்.போஸ் மாநிலத்தலைவராகவும், ஹீலர்.அ.உமர் பாரூக் பொதுச்செயலாளராகவும், மாநிலப் பொருளாளராக ஹீலர்.ஜெயராஜ், மாநில துணைத்தலைவர்களாக ஹீலர்.மகி.ராமலிங்கம், ஹீலர்.தேவராஜன், மாநில இணைச்செயலாளர்களாக ஹீலர்.பாண்டியன், ஹீலர்.பி.எம்.உமர் பாரூக், மாநில துணைச்செயலாளர்களாக ஹீலர்.பார்த்திபன், ஹீலர்.இல்யாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

த.மு.எ.க.ச.வின் மாநில துணைப்பொதுச்செயலாளர்.ஆதவன் தீட்சண்யா, தமிழ்நாடு யோகாசன சங்க மாநில பொதுச்செயலாளர் யோகி ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தீர்மானங்கள் :

தீர்மானம் : ஒன்று

ஐக்கியநாடுகள் சபையின் அங்கமான யுனிசெஃப் சர்வதேச அமைப்பு அக்குபங்சர் மருத்துவத்தை 2010 டிசம்பர் மாதத்தில் உலக பாரம்பரிய வரலாற்றுச் சின்னமாக அங்கீகரித்துள்ளது. மருந்தில்லா மரபுவழி அறிவியலான அக்குபங்சர் மருத்துவத்தின் எளிமையான சிகிச்சை முறையை அங்கீகரித்த யுனிசெஃப் அமைப்பின் அறிவிப்பை தமிழ்நாடு அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பின் கோவை மாநாடு வரவேற்கிறது.

தீர்மானம் : இரண்டு

இந்திய மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக அக்குபங்சர் மருத்துவத்திற்கான அரசாங்க கவுன்சிலை ஏற்படுத்தி, அரசு மருத்துவமனைகளில் அக்குபங்சர் மருத்துவத்தை சிகிச்சைக்குப் பயன்படுத்தி வரும் மேற்கு வங்க அரசை தமிழ்நாடு அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பின் கோவை மாநாடு வாழ்த்துகிறது. மரபு முறையிலான அக்குபங்சர் பாடத்திட்டத்தை எதிர்காலத்தில் பரிசீலிக்குமாறு மாநாடு மேற்குவங்க அரசைக் கோருகிறது.

தீர்மானம் : மூன்று

மத்திய அரசு ஆணை 2003 இல் அக்குபங்சர் மருத்துவத்தை சிகிச்சை முறையாக அங்கீகரித்தது. அரசு ஆணை 2010 இன் மூலம் மீண்டும் அங்கீகாரத்தை உறுதி செய்துள்ளதை தமிழ்நாடு அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பின் கோவை மாநாடு வரவேற்கிறது. அதே நேரம் அக்குபங்சரை சிகிச்சை முறையாக அங்கீகரித்து எட்டு ஆண்டுகள் ஆகியும் முழுமையான மருத்துவமுறைகளுக்கான பட்டியலில் சேர்க்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அக்குபங்சரை பிற உலக நாடுகள் போல முழுமையான மருத்துவமுறையாக அங்கீகரிக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : நான்கு

தமிழகத்தில் முதல் முறையாக இந்திய அக்குபங்சர் பாடத்திட்டத்தை அங்கீகரித்து பயிற்சிகளைத் துவங்கவுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பின் கோவை மாநாடு வாழ்த்துகிறது.

தீர்மானம் : ஐந்து

இந்திய மக்களின் சுகாதாரம் தொடர்பான தேவைகளை இறுதி செய்யும் அமைப்பு எல்லா மருத்துவத்தின் பிரதிநிதிகளையும் கொண்ட பொது அமைப்பாக இருக்க வேண்டியது அவசியம். தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார அமைப்பு ஒரே ஒரு மருத்துவத்தின் கீழ் செயல்படுகிறது. இது ஜனநாயகத் தன்மைக்கு எதிரானது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவங்களின் பிரதிநிதிகளையும் சம அளவில் உள்ளடக்கிய ”ஆல் இண்டியா ஹெல்த் கவுன்சிலை” – பொது அமைப்பை நிறுவ வேண்டுமாய் தமிழ்நாடு அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பின் கோவை மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் : ஆறு

இரசாயனம் இல்லாத உணவு உற்பத்தித் திட்டமான இயற்கை வேளாண்மையை இந்தியாவில் முதல் முறையாக கேரள அரசு துவக்கியுள்ளதை தமிழ்நாடு அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பின் கோவை மாநாடு வரவேற்கிறது. கேரள அரசைப் பின்பற்றி மத்திய அரசு இயற்கை வேளாண் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமாய் இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் : ஏழு

”அக்குபங்சர் மருத்துவத்தை தனியார் பங்களிப்பின் மூலம் ஊக்குவிக்க வேண்டும்” என்று 2002 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது. அறிவிப்பு வெளிவந்து ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில் அதனை அமுல்படுத்தக் கோரி இம்மாநாடு வலியுறுத்துகிறது.

பிற்பகல் கருத்த்ரங்கத்தில் ஹீலர். கிருஷ்ணன் தலைமை வகிக்க, இயற்கை வேளாண் விஞ்ஞானிPicture 116 டாக்டர்.கோ.நம்மாழ்வார், ஹீலர்.பி.எம்.உமர் பாருக் DSCF3572அவர்கள் உரையாற்றினார்கள். டாக்டர்.புகழேந்தி அவர்களின் தடுப்பூசி தொடர்பான கட்டுரை வாசிக்கப்பட்டது.

இந்தியாவில் அக்குபங்சர் – சட்ட அங்கீகாரம் குறித்த கட்டுரைகள் நூலும், வாய்ஸ் ஆஃப் ஹெல்த் எனும் ஆங்கில நூலும், சரீரத்திண்ட பாஷ எனும் மலையாள நூலும், பல்கலைக்கழக பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்திய அக்குபங்சர் என்ற நூலும், தமிழ்வாணனின் இயற்கை வைத்தியம் சிறப்புப்பதிப்பும், இயற்கைக்குத் திரும்புவோம் என்ற மின்நூல்கள் அடங்கிய குறுந்தகடும் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் மட்டும் இயங்கிக்கொண்டிருந்த கூட்டமைப்பு தென் மாநிலங்களில் இயங்கும் தென்னிந்திய அக்குபங்சர் ஆலோசகர்கள் கூட்டமைப்பாக மாற்றப்பட்டது. கேரள மாநில அமைப்புக்குழுவாக 17 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநாட்டு நிறைவுரையாக மாநிலத்தலைவர் ஹீலர்.போஸ் முகமது மீரா உரையாற்றினார்.

2 கருத்துகள்:

  1. இயற்கைக்குத் திரும்புவோம் என்ற மின்நூல்கள்


    please price details and address.

    பதிலளிநீக்கு
  2. இயற்கைக்குத் திரும்புவோம் என்ற மின்நூல்கள்


    please price details

    பதிலளிநீக்கு